கமல் கட்சிக்கு குவியும் பிரமுகர்கள்: கதவை அடைத்த கமல்


sivalingam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (11:16 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்ட நிலையில் வரும் நவம்பர் 7அன்று அவருடைய கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அறிவிக்கப்படும் என கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்


 
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சிக்கு வர திராவிட கட்சிகளின் சில பிரமுகர்கள் தூது விடுவதாகவும், ஆனால் பிற கட்சியில் உள்ளவர்கள் யாருக்கும் தனது அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கதவை அடைத்துவிட்டதாகவும் கமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
 
தன்னுடன் பல ஆண்டுகள் பயணம் செய்த ரசிகர்களுக்கே முதலிடம் என்றும், எந்த கட்சியில் இருந்து வரும் அரசியல்வாதிகளை அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :