Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Numerology
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:52 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முற்பகுதியில் கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும்

 
முடிந்துவிடும் என நினைத்த விஷயங்கள் கூட அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். மையப் பகுதியிலிருந்து இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள். மகனுக்கு எதிர்பார்க்கும் கல்லூரி, பள்ளியில் உயர்கல்வியில் சேர்க்க வி.ஐ.பிகள் உதவுவார்கள். 
 
பணத்தட்டுப்பாடு ஓரளவு நீங்கும். கண் வலி குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு வாங்க லோன் கிடைக்கும். பழுதான வாகனம் ஓடும். 
 
அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 
 
கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். தளராத நெஞ்சுறுதியுடன் செயல்படும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 9, 10, 18, 21, 27   
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்


இதில் மேலும் படிக்கவும் :