ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Numerology
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:46 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் புது தெம்பு பிறக்கும். 

 
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். ஜவீண் கவலை நீங்கும். வழக்கு சாதகமாகும். கொடுத்த பணம் திரும்பி வரும். வேலைக் கிடைக்கும். தந்தையின் ஆரோக்யம் சீராகும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். விசேஷங்களில் மதிக்கப்படுவீர்கள். 
 
வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. என்றாலும் பழைய கடன் பற்றிய கவலைகள், வீண் பயம், மஞ்சள் காமாலை வரக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 
 
அரசியல்வாதிகளே! தலைமையுடனான மோதல்கள் விலகும். 
 
கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகள் உதவுவார்கள். சக ஊழியர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். 
 
கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சுற்றியிருப்பவர்களின் உள்மனசை அரியும் மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்: 8, 13, 14, 15, 17  
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

webdunia

இதில் மேலும் படிக்கவும் :