1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:40 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். 

 
முக்கிய பிரமுகர்களின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். அயல்நாட்டிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். 
 
திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் அரசு காரியங்கள் இழுபறியாகும். பெற்றோருடன் வீண் விவாதங்கள் வரும். சகோதரங்களுடன் மோதல்கள் வரக்கூடும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது விற்பதில் சிக்கல்கள் ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல் வந்துப் போகும். 
 
அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு லாபம் காண்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். 
 
கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 6, 15, 22, 24
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, மஞ்சள்  
அதிஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி