Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Numerology
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:43 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். 

 
வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆனால் பயணங்கள் அதிகரிக்கும். திடீர் செலவுகளும் இருக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். 
 
வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும். மாதத்தின் பிற்பகுதியில் கண் எரிச்சல், காது, தொண்டை வலி, மனைவிக்கு மனஇறுக்கம் வந்துப் போகும். தந்தை உடல் நலம் பாதிக்கும். திடீர் செலவுகள், ஏமாற்றம் வந்துப் போகும்.
 
 யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். நரம்புக் கோளாறு வந்து நீங்கும். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 
 
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 
 
கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். 
 
கலைத்துறையினர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். எதார்த்தமான பேச்சால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 6, 17, 14, 23   
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம் 
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்


இதில் மேலும் படிக்கவும் :