Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Numerology
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:48 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். 

 
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது வேலை அமையும். திருமணத் தடை நீங்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். வி.ஐ.பிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
தாய்வழி உறவினர்கள் உங்களைப் புகழ்வார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால் சிறுசிறு வாகன விபத்து, தொண்டை புகைச்சல், மனைவிக்கு இடுப்பு, மூட்டு வலி, யூரினரி இன்பெக்ஷன், கழிவு நீர், குடிநீர் குழாய் அடைப்பு வந்துப் போகும். மாதத்தின் பிற்பகுதியில் பேச்சில் கம்பீரம் பிறக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். 
 
கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். 
 
கலைத்துறையினர்களே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் மாதமிது.        
 
அதிஷ்ட தேதிகள்: 7, 16, 11, 20, 24 
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, சில்வர்கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி


இதில் மேலும் படிக்கவும் :