வியாழன், 2 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:50 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியம் பிறக்கும். 

 
வி.ஐ.பிகளுடன் சகஜமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். கடனைப் பற்றி அவ்வப்போது கவலைப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அரசியல் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் குறித்த கவலைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். 
 
பூர்வீக சொத்துப் பிரச்னை சரியாகும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கடந்த கால அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். மாதப் பிற்பகுதியில் வீண் பயம், கவலைகள், சகோதர வகையில் சங்கடங்கள் வந்துச் செல்லும். வழக்கில் நிதானம் அவசியம். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். 
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். உத்யோகத்தில் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் விவாதங்கள் வந்து நீங்கும். 
 
கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். உற்சாகத்துடன் வலம் வரும் மாதமிது.
     
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 14, 15, 17   
அதிஷ்ட எண்கள்: 7, 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி