வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:31 IST)

அம்மாடி… இத்தனை தியேட்டர்களிலா ரிலீஸாகிறது ‘மெர்சல்’?

‘மெர்சல்’ படம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 
 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனனும், மகன்கள் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு,  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
 
இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால், தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்னைகளால்,  ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான். ஆனால், நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது தயாரிப்பு  தரப்பு. அப்படி ரிலீஸானால், உலகம் முழுவதும் 3292 தியேட்டர்களில் ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வருகிற  நாட்களில் இது அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.