Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

41 திரையரங்குகளில் மெர்சல் திரையிட தடை கோர வழக்கு


sivalingam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (17:36 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி தினத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட தயார் நிலையில் இருக்கின்றது. இந்த நிலையில் 41 திரையரங்குகளில் 'மெர்சல்' படத்தை திரையிட தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
 
41 திரையரங்குகளில் பெரிய நடிகர்கள் படம் ரிலீசாகும்போது முதல் 5 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் இந்த 41 திரையரங்குகளிலும் விஜய்யின் 'மெர்சல்' படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, 'இந்த வழக்கு பொதுநல நோக்கத்துடன் இருப்பதால் இந்த  வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு நாளை தலைமை நீதிபதியின் அமர்வு முன் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிராது.


இதில் மேலும் படிக்கவும் :