வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (18:52 IST)

ரஜினி மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்யும் விசாகனின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். 
இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. சௌந்தர்யா - அஸ்வின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
 
தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்யவுள்ளார். கோவை முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்திருக்கும் இவர் அடுத்ததாக சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இவருடன் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த நிச்சயித்துள்ளனர். 
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், விசாகனுக்கும்  ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தாகியுள்ளது. அமெரிக்காவில் எம்பிஏ படித்திருக்கும் இவர் தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் இந்தியாவின் முன்னணி Apex நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.
 
இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 500 கோடியாம். இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.