ஒருசில நொடி சந்தோஷத்திற்கு இப்படியா செய்வது? சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆவேசம்

Last Modified ஞாயிறு, 4 மார்ச் 2018 (12:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் டீசர் இன்று காலை திருட்டுத்தனமான இண்டர்நெட்டில் லீக் ஆகியது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டீசர் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவிவிட்டது.

ஒரு நிமிடம் 27 வினாடிகள் கொண்ட இந்த டீசர் லீக் ஆனது எப்படி என்று தெரியாமல் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் மீள அவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். இந்த நிலையில் இந்த லீக் குறித்து ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது டுவிட்டரில் கூறியபோது

ரஜினியின் 2.o படத்தின் டீசர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக டீசர் வெளியானதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை யாரும் ஊக்குவிக்க வேண்டாம். இதுவொரு இதயமற்ற செயல். கடுமையான உழைப்பு, படக்குழுவினர்களின் செண்டிமெண்ட் ஆகியவற்றை ஒருசில நொடிகள் சந்தோஷத்திற்காக வீணடிப்பதா? இதுவொரு வெட்கங்கெட்ட செயல் என்று ஆவேசமாக டுவீட் செய்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :