செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (18:30 IST)

காண்டம் நிறுவனத்தின் வாழ்த்தை பெற்ற தீபிகா - ரன்வீர் ஜோடி!

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியிலுள்ள ஆடம்பர விடுதியில் நேற்று நடந்து முடிந்தது. 
 
தீபிகாவும், ரன்வீரும் காதலித்து வருவதாக கடந்த ஆறு வருடங்களாக கூறப்பட்டு வந்தாலும், இந்தாண்டின் தொடக்கத்தில்தான் இருவரும் காதலை உறுதி செய்தனர். 
 
இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல காண்டம் நிறுவனம் ஒன்று இவர்களது திருமணத்திற்கு வாழத்து தெரிவித்துள்ளது. 
முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கத் தயங்கும் ஆணுறை விளம்பரத்தில் துணிந்து நடித்தவர் ரன்வீர் சிங். செக்ஸ் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் வெளிப்படையாக கூறியவர். 
 
தற்போது அந்த காண்டம் தயாரிப்பு நிறுவனம் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதோடு, அமுல் நிறுவனமும் இவர்களுக்கு திருமண வாழ்த்தை பதிவிட்டுள்ளது.