வியாழன், 14 ஆகஸ்ட் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2025 (16:56 IST)

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஜெயிலரின் உதவியுடன் வெளியே வரும் அஜித், தனது மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் மகனை மீட்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.

பழைய பாணிக் கதையாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு துள்ளலான ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்து தப்பித்துள்ளார் ஆதிக். இந்நிலையில் இந்த படத்தைப் பார்க்க சென்னை தியேட்டர் விசிட் அடித்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து “நீங்க ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றங்கள நடத்திருக்கலாம். அது இல்லாதப்பவே இப்படி கலாட்டா பண்றீங்களேடா” என செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.