வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (17:18 IST)

விஜய் –அட்லி இணையும் விஜய் 63-ல் இருக்குமா அரசியல்?

தெறி, மெர்சல் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மூன்றாவது முறையாக இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் தனக்கு தெறி, மெர்சல் படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இயக்குனர் அட்லியோடு மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தினை ஏ.ஜிஎஸ். நிறுவனம்  மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விஜய் 63 என தற்போது அழைக்கப்படும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் பாடலாசியராக விவேக் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மெர்சல் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மெர்சல் படத்தின் மூலம் வெளிப்படையான அரசியல் பேசி பல விமர்சனங்களை சந்தித்தார் விஜய். அந்த விமர்சனங்களாலேயே மெர்சல் படம் சிறப்பாக ஓடி வசூல் சாதனைப் புரிந்துள்ளது. அது போலவே விஜய்யின் சர்கார் படத்தில் அரசியல் வெளிப்படையாக பேசப்பட்டு ஆளும்கட்சியின் கோபத்திற்கு ஆளானது. விஜய் தொடர்ந்து தனது படங்களில் அரசியல் பேசுவதன் காரணம் அவரது அர்சியல் ஆசையே எனக் கூறப்பட்டு வருகிறது.

எனவே விஜய் அட்லி இணையும் அடுத்த படத்திலும் அரசியல் கருத்துகள் இருக்குமா? என்ற சந்தேகம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனால் படத்தை தயாரிக்கும் ஏ ஜி எஸ் நிறுவனம் இந்த படத்தில் அரசியல் வேண்டாம் எனவும் குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் பொழுதுபோக்க்குப் படமாக இந்த படத்தை உருவாக்கலாம் என விஜய்யைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதற்கு விஜய்யும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே விஜய் நடிக்கும் அடுத்தப் படம் அரசியல் இல்லாத குடும்ப சித்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.