காஷ்மீர் வேண்டாம்; கோலி போதும்: வைரலாகும் பாக். இளசுகளின் புகைப்படம்!

Last Updated: புதன், 19 ஜூன் 2019 (15:25 IST)
சில பாகிஸ்தான் இளைஞர்கள் எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலி போதும் என போராட்டம் நடத்துவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. 
 
பொதுவாகவே பாகிஸ்தான் – இந்தியா மோதும் கிரிக்கெட் ஆட்டங்கள் உலகம் முழுவதும் பரபரப்போடு உற்று நோக்கப்படும். அதேபோல்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை ஆட்டத்தில் 337 ரன்கள் அடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் வெறும் 212 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது பாகிஸ்தான். 
 
இதற்கு மேல் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல முடியாது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் அணி மீது தீராத கோபத்தில் உள்ளனர். 
kohli
ஏற்கனவே, பாகிஸ்தான் அணியையும், அதை தேர்வு செய்த தேர்வு குழுவையும் கலைக்க வேண்டுமெனவும், புதிய தேர்வு குழுவை உருவாக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் ரசிகர்கள் கூறிவரும் நிலையில், இப்போது எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலி போதும் என போராட்டம் நடத்துவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
ஆனால், இந்த புகைப்படம் போலியானது என்றும் எடிட் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :