புதன், 5 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2024 (10:59 IST)

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர்.

அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இந்திய அணி முன்னாள் வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அஸ்வினின் தந்தை கூட அஸ்வின் அவமானப்படுத்தப் பட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் தனக்கு யார் மேலும் வருத்தம் இல்லை எனவும் ஓய்வு குறித்து நிறைவாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு நடக்காத விஷயம் என்றால் அது பாகிஸ்தான் அணியோடு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை என்பதுதான்” எனக் கூறியுள்ளார்.