புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சச்சின் மகனை கண்டு மிரண்ட இங்கிலாந்து

arjun tendulkar
Last Modified புதன், 19 ஜூன் 2019 (14:17 IST)
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர நாயகர் சச்சினின் மக அர்ஜுன் கிரிக்கெட் ஆடியதை பார்த்து புகழ்ந்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருக்கின்றனர் லண்டனின் லார்ட்ஸ் மைதான நிர்வாகத்தினர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான வீரர் சச்சின் டெண்டுல்கர். ஓவொரு கிரிக்கெட் ஆட்டத்தின்போதும் சச்சினின் சிக்சர்களை பார்க்க கருப்பு வெள்ளை தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்திருந்த 90’s Kids பலர்.

சச்சினின் மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். தந்தை போல் அல்லாமல் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார் அர்ஜுன். இந்நிலையில் எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார் அர்ஜுன். சர்ரே 2-வது லெவன் அணியின் நாத டைலி என்பவரை தனது பந்துவீச்சால் அர்ஜுன் க்ளீன் போல்ட் ஆக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட லண்டனின் லார்ட்ஸ் மைதானம் “அர்ஜுன் டெண்டுல்கருக்கு தலைவணங்குகிறோம்” என கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :