’அழுத பாகிஸ்தான் ’ வீரருக்கு ஆறுதல் கூறிய இந்திய நடிகர் ... வைரலாகும் வீடியோ

RANVEER
Last Updated: செவ்வாய், 18 ஜூன் 2019 (18:51 IST)
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதாவது போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் டக் வொர்த்  லீவிஸ் முறைப்படி இந்தியா 89ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
பாகிஸ்தான் விளம்பரங்களில் அவ்வளவு பில்டப் கொடுத்தும் கூட இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சோபிக்கவில்லை. அதுவும் தொடர்ச்சியாக 7 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோற்றதை அடுத்து அப்போட்டியைக்  காணவந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன் வருத்தத்தை தெரிவித்து சோகவடிவமாக இருந்தார்.
 
அப்போது  அவர் அருகில் இருந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் : ’உங்கள் நாட்டு அணி வீரர்கள் சிறந்த முறையில் விளையாடினர். திறமையாகவும் விளையாடினர். எப்போதும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆறுதல் கூறினார்.’
 
இந்த வீடியோ இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாட்டினராலும் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :