இங்கிலாந்து வீரர் விக்கெட்டை கொண்டாடிய இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்

Ishant Sharma
Last Updated: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (20:25 IST)
இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன் விக்கெட்டை வீழ்த்தி பிறகு கொண்டாடியதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
பெரும்பாலும் பந்து வீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன் விக்கெட்டை வீழ்த்திய பின் கொண்டாடுவது வழக்கம். அதில் அவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை இழிவு படுத்தும் விதமாகவோ, வெறுப்பேற்று விதமாகவோ, தவறான வார்த்தைகளை பயன்படுத்தியோ கொண்டாடுவது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது.
 
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு அபராதம் மற்றும் டிமெரிட் புள்ளி வழங்குவது வழக்கம். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மிலான் விக்கெட்டை வீழ்த்திய பின் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
 
இதற்காக இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டிமெரிட் புள்ளியும், போட்டியின் சம்பளத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :