முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வி!

England
Last Updated: சனி, 4 ஆகஸ்ட் 2018 (17:27 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் ஆகஸ்டு 1ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கியது.
 
5 போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்களின் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் குவித்தது. 
 
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 274 ரன்கள் மட்டுமே குவித்தது. 13 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே குவித்தது.
 
இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்டியா இறுதியில் களத்தில் தனியாக போராடி வீழ்ந்தார்.
 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சதம் விளாசி அசத்தினார். இராண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசி அசத்தினார்.
 
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் சாம் குரான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி சார்ப்பில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
 
இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :