வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (12:24 IST)

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனையில் நடந்த திருமணம்

தெலுங்கானாவில் தற்கொலை முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனை வளாகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.


 
தெலுங்கானா மாநிலம் விகரபாத்தைச் சேர்ந்தவர் நவாஷ். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ரேஷ்மா பேகம். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ரேஷ்மா பேகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
இதையடுத்து மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த நவாசும் பூச்சி மருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றொர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
 
இதையடுத்து, விகரபாத்தில், இருவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே, நவாஸ், ரேஷ்மா பேகம் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.