காதல் திருமணம் செய்த ஆணுக்கு அரிவாள் வெட்டு- பெண்ணைத் தூக்கிச் சென்ற உறவினர்கள்

Last Modified சனி, 13 அக்டோபர் 2018 (11:15 IST)
கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்துகொண்டு போலிஸ் ஸ்டேஷனில் ஆஜராக வந்த மணமக்களை பெண்ணின் சொந்தக்காரர்கள் அரிவாளால் தாக்கி பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டார்வினும் டிக்சோனாவும். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு டிக்சோனாவின் வீட்டார் சம்மதிக்காததால் இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டை விட்டு ஓடி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் கன்னியாகுமரி போலிஸ் ஸ்டேஷனில் ஆஜராவதற்காக காரில் வந்துள்ளனர். மணமக்கள் வந்த காரை மறித்த டிக்சோனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்டார்வின் மற்றும் அவரது உறவினர்களை அரிவாளால் தாக்கிவிட்டு டிக்சோனாவைக் கடத்திச் சென்றுள்ளனர்.

தாக்கப்பட்டவர்கள் மூன்று பேரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலிஸார் இது சம்மந்தமாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :