ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த மாணவன் தற்கொலையா...?

karthick
Last Modified சனி, 1 டிசம்பர் 2018 (14:00 IST)
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திக்கதிம்மனஹள்ளி என்ற கிராமத்தில் கோவிந்தன் என்பரின் மகன் கார்த்திக் (15)ஆவார்.இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து  வந்தார். பொது தேர்வுக்காக மாணவர்களை  ஆசிரியர் தயார் செய்து வந்த நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற கார்த்திக்கை ஆசிரியர் பிரம்பினால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
அன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த கார்த்திக் ஆசிரியர் தன்னை அடித்தது பற்றி கூறியுள்ளார். பெற்றோர் எவ்வளவு  ஆறுதல் கூறியும் மாணவன் மன இறுக்கத்துடனே காணப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் எல்லோரும் வேலைக்கு சென்ற நிலையில் மனபாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இது குறித்து அறிந்த போலிஸார் கார்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
கார்த்தின் தற்கொலை குறித்து காரிமங்கலம் போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :