ஒசூர் தம்பதி இருவர் ஆவணக்கொலை தொடர்பாக மூவர் கைது...

osur
Last Modified செவ்வாய், 20 நவம்பர் 2018 (20:26 IST)
ஒசூர் அருகே உள்ள  குடுகொண்டானில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நந்தீஸ்- சுவாதி தம்பதி ஆவணக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலிமறைவாக இருந்த பெண்ணின் பெரியப்பா அஷ்வந்த் , சித்தப்பா வெங்கட்ராஜூ ,லஷ்மன் அக்கியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆவணக்கொலை தொடர்பாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கொல்லப்பட்டு தம்பதி இருவரும் ஆற்றில் வீசப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :