புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:00 IST)

பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்திலுள்ள இந்தியா

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பசி மற்றும் பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா, பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 97வது இடத்திலிருந்து இந்த  ஆண்டு 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் இது தொடர்பாக 119 நாடுகளிலும் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் அறிக்கையில், இந்தியாவில் பசி மற்றும் பட்டினியால் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் உள்ளதாகவும், 5-இல் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் எடையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 29-வது இடத்திலும், நேபாளம் 72, மியான்மர் 77, இலங்கை 84, வங்கதேசம் 88-வது  இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 107-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 108-வது இடத்திலும் இருக்கின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் மட்டுமே இந்தியாவை காட்டிலும் பின்னால் உள்ளன.