திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 டிசம்பர் 2024 (17:58 IST)

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

indian post
அஞ்சல் துறையின் நூல் அஞ்சல் சேவை மூலமாக ஏராளமானோர் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது திடீரென இரவோடு இரவாக அந்த சேவை நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அஞ்சல் துறை கல்வி மற்றும் வாசிப்பு பழக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்க நூல் அஞ்சல் சேவை என்ற சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது என்பதும், ஐந்து கிலோ புத்தகங்களை அனுப்புவதற்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக புத்தக பதிப்பாளர்கள் ஏராளமான ஆர்டர்கள் பெற்று புத்தகங்களை அனுப்பி வந்த நிலையில், தற்போது திடீரென இரவோடு இரவாக நூல் அஞ்சல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் இணையதளத்தில் கூட நூல் அஞ்சல் சேவை நீக்கப்பட்டுள்ளது என்றும், இது சில அஞ்சல் துறை ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த சேவையை திடீரென நிறுத்தப்பட்டதால் புத்தக பதிப்பு துறை மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் நூல் அஞ்சல் சேவையை தொடர வேண்டும் என்று புத்தக பதிப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Edited by Mahendran