2வது டி-20 போட்டி: இந்தியாவை எளிதில் வீழ்த்திய ஆஸ்திரேலியா


sivalingam| Last Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (22:28 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஒருநாள் போட்டி தொடரை ஏற்கனவே இழந்துள்ள நிலையில் முதல் டி-20 போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய 2வது டி-20 போட்டியில் வெற்றி பெற்ற ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.


 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓவரில் வெறும் 27 ரன்களுக்கு ரோஹித் சர்மா, கோஹ்லி, பாண்டே மற்றும் தவான் ஆகிய முன்னணி விக்கெட்டுக்களை இழந்தது. இந்த நிலையில் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது
 
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் பின்ச் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் ஹெட் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தி சமநிலையில் உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :