செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (17:08 IST)

தமிழை அடுத்து கன்னடத்தில் கால் ஊன்றும் நடிகர் தனுஷ்

ஒரு நடிகராக தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ள நடிகர் தனுஷ், அதேப்போல தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கால் ஊன்ற முடிவு செய்துள்ளார்.

 
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். 'பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 
 
தற்போது மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து,  அதில் 'தரங்கம்' படத்தை சமீபத்தில் ரிலீஸ் செய்தும் விட்டார். அந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும்  கிடைத்துள்ளது. வுண்டர்பார் நிறுவனத்தின் அடுத்த முயற்சியாக கன்னட திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. 
 
அதன் முதற்கட்ட முயற்சியாக கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார்.