1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (23:28 IST)

அஜித்துடன் இணைந்தார் மகேஷ்பாபு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கும் இளையதளபதி விஜய்க்கும் அதிக ஒற்றுமைகள் இருந்து வரும் நிலையில் முதன்முதலாக மகேஷ்பாபு படம் அஜித்துடன் இணைந்துள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்



 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ள 'ஸ்பைடர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
 
இந்த நிலையில் ஸ்பைடர் படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் அஜித்தின் 'விவேகம்' படத்தின் சென்னை உரிமையை பெற்று மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்த நிலையில் தற்போது மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர் படத்தை சென்னையில் ரிலீஸ் செய்யவுள்ளது.
 
வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிட ஜாஸ் சினிமாஸ் திட்டமிட்டுள்ளது. சென்னையில் மகேஷ்பாபுவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் இந்த படத்தின் ஓப்பனிங் சென்னை வசூல் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.