Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தை வைத்து விளம்பரம் தேடிய ஆப்பிள் ஐபோன்


sivalingam| Last Modified வியாழன், 14 செப்டம்பர் 2017 (00:30 IST)
ஆப்பிள் ஐபோனின் புதிய மாடலான ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டன. உலகம் முழுவதும் இந்த புதிய அறிமுகங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது


 
 
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களில் அஜித்தின் விவேகம் போஸ்டர் உள்ளது. உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆன பல ஹாலிவுட் திரைப்படங்கள் இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு தமிழ் படத்தை தேர்வு செய்து விளம்பரம் தேடிக்கொண்டது அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது.
 
அதுமட்டுமின்றி முதல் நாள் முதல் காட்சியில் இருந்து இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் எழுதிய பெய்டு விமர்சகர்களுக்கு சரியான பதிலடியாகவும் இந்த விளம்பரம் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :