தூங்கி வழிந்த ரவி சாஸ்திரி; எழுப்பிவிட்ட ஹர்பஜன்: மைதானத்தில் சிரிப்பலை!

Last Updated: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (17:43 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி பர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. 
நேற்றைய போட்டியில், மத்திய உணவுக்கு பிறகு ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால், ஆட்டத்தை கவனிக்காமல் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்கி வழிந்தார். 
 
இதை கேமராவில் பார்த்த வர்ணனையாளர் ஹர்பஜன், ரவி சாஸ்திரியின் அருகில் இருந்த துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம், ரவி சாஸ்திரியின் கன்னத்தைப் பிடித்து இழுத்து உலுக்கி, தூக்கத்தில் இருந்து எழுப்புங்கள் என கூறினார். 
 
சஞ்சய் பங்கர் இயர்போனை ரவி சாஸ்திரியிடம் கொடுக்க அவரிடம் ரவி எழுந்திருங்கள், தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள் என தெரிவித்தார் ஹர்பஜன். ஆனால், ரவி சாஸ்திரியோ நான் தூங்கவில்லை தியானம் செய்தேன் என கூறினார். இதனால் மைதானத்தில் சிரிப்பலை நிரம்பியது. 


இதில் மேலும் படிக்கவும் :