இந்திய அணியை காப்பாற்றிய 'தனி ஒருவன்' விராத்கோஹ்லி: ப.சிதம்பரம் புகழாரம்

Virat Kohli
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டிருந்த நிலையில் தனி ஒருவனாக விராத் கோஹ்லி அபாரமாக விளையாடி காப்பாற்றியுள்ளார்
நேற்று முன் தினம் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய் மற்றும் தவான் ஆகியோர் 20 மற்றும் 26 ரன்களிலும் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராத்கோஹ்லி தனி ஒருவராக ஆக்ரோஷமாக விளையாடி 149 ரன்கள் அடித்தார் இதில் 22 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.
விராத்கோஹியின் அபார ஆட்டத்தை முன்னாள் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :