Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : துலாம்

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (12:21 IST)
பலம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
 
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டு மஹாலட்சுமியின் அருள் பெற்ற துலா ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். 
குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ  அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை  நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும்.  முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக் கொள்ள  அழைப்பார்கள். 
 
பலவீனம்:
 
தொழிலில் சிறு சிறு தடங்கல்கள் வரலாம். உங்களிடம் வேலைபார்ப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது  கவனமுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முடிவுகளில் நிதானம் தேவை. வாக்கு கொடுப்பதற்கு முன் தீர ஆலோசித்து உங்களால் முடியுமா என்று ஆராய்ந்து  வாக்கு கொடுப்பது நல்லது. எதிலும் அவசரப் படாமல் தீர ஆலோசித்து செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :