1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (12:06 IST)

2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : கன்னி

பலம்: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்:)
 
புதன் பகவானை ராசிநாதனாகக் கொண்டு, பெருமாளின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர  பாக்கியமும், மற்றவர்களுக்கு பேரக் குழந்தை பாக்கியமும் உண்டாகும். 
குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த  அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும்  கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் திறமையால் புதிய  நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் தர்க்க ஞானமும் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவீர்கள்.
 
பலவீனம்:
 
நீங்கள் கைநிறைய சம்பாதித்தாலும் உங்கள் தூக்கம் கெடும். சரியான நேரத்தில் உணவு உண்ண முடியாமல் போகலாம். நீங்கள் சம்பாதித்ததை அனுபவிக்க  முடியாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். எனவே யோசித்து அதற்கான நேரம் ஒதுக்கி அனைத்தையும் கையாள்வது நல்லது. தொழிலில் முதலீடு செய்யும்  போது கவனமுடன் இருப்பது நல்லது. நன்கு விசாரித்து பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வது நல்லது. 
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள்  இருக்கும்.