1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (11:38 IST)

2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : மிதுனம்

பலம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
 
புதன் பகவானை ராசிநாதனாகக் கொண்டு பெருமாளின் அருளினைப் பெற்ற மிதுன ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். 
புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும்  உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள்  கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி  ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். 
 
பலவீனம்:
 
குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் தோன்றி மறையலாம். நீங்கள் கவனமுடன் கையாளும் போது அவற்றை சமாளித்துக் கொள்ளலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் கடின போராட்டத்திற்குப் பின்னரே நன்றாக நடந்து முடியும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. இயந்திரங்களில்  வேலை பார்க்கும் போதும் கவனமுடன் இருப்பது அவசியம். தேவையில்லாத இடத்தில் வாய் திறக்காமல் இருப்பது நலம். கருத்து சொல்கிறேன் என்று  மாட்டிக்கொள்ளாதீர்கள். மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.