1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (11:55 IST)

2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்மம்

பலம்: (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)
 
சூரியனை ராசிநாதனாகக் கொண்டு, சிவ பெருமானின் அருள் பெற்ற சிம்ம ராசி அனபர்களே, இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த  அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். 
புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய  சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள்  அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 
 
பலவீனம்:
 
உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் இருந்து கொண்டு இருக்கும். உடலை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். உங்களை பாராட்டி ஏமாற்ற சிலர்  முற்படுவார்கள். கவனம் தேவை. பாராட்டிற்கு மயங்கிவிடாதீர்கள். தேவையில்லாத செலவு செய்து விட்டு யோசிக்க வேண்டி வரும். எனவே ஒரு செலவு  செய்வதற்கு முன் இது அவசியம் தானா என யோசித்து செய்வது நல்லது. தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். எனவே உடல் நலத்தை கவனித்துக்  கொள்வது அவசியம்.
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.