2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : கடகம்

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (11:39 IST)
பலம்: (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
சந்திரனை ராசிநாதனாகக் கொண்டு, அம்பாளின் அருளைப் பெற்ற கடக ராசி அன்பர்களே, இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள்.  மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். 
தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள்  காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின்  நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். 
பலவீனம்:
 
உடலில் சிறு சிறு தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளும் இருந்து கொண்டே இருக்கும். சரியான நேரத்தில் மருந்து  எடுத்துக் கொள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம். சிறு தொந்தரவு என்றாலும் உடனே மருத்துவரை அணுகி மருந்து உண்பது  நல்லது. கவனக்குறைவு வேண்டாம். நீங்கள் செய்யும் சுபகாரியங்கள் நன்றாக செய்து முடியும் என்றாலும் சிறு போரட்டத்திற்குப் பிறகே நடக்கும். எனினும்  கவலை கொள்ள வேண்டாம். 
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்:

துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :