2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : தனுசு

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (12:38 IST)
பலம்: (மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)
 
குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டு, சித்தரிகளின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். 
தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில்  வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டினால் குதூகலங்கள் அதிகம் சந்திப்பீர்கள். பாசம்  காட்டாத உற்றார் உறவினர்கள் பாசம் காட்டத் துவங்குவார்கள். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும். 
 
பலவீனம்:
 
திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை  ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதும் கவனமுடன் இருப்பது அவசியம். உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. பணப்புழக்கம் அதிகம் இருப்பதால் கவனமுடன் கையாள வேண்டும். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்வது அவசியம்.
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.


இதில் மேலும் படிக்கவும் :