திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2017 (17:22 IST)

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் இப்போது மர்மயுத்தம் நடத்துகிறார். சுப.வீரபாண்டியன்

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோதிலும் தாமரை இலை தண்ணீர் போல் இரு அணிகளும் முழுவதுமாக உள்ளதால் இணையவில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த இணைப்பு குறித்து கருத்து கூறிய சுப.வீரபாண்டியன்  தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ், தற்போது எடப்பாடியுடன் மர்ம யுத்தம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்

இன்று நாகர்கோவிலில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சுப.வீரபாண்டியன் கூறியதாவது: இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட அடுத்த நாளே, ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளது.

தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து விட்டதாக கூறுகின்றனர். அணிகள் இணைப்புக்கு பின்னும் அவர்கள் அ.தி.மு.க. கட்சியினராக செயல்படவில்லை. இன்னமும் தனித்தனி அணியினராவே செயல்படுகின்றனர். முன்பு, ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமியுடன், அவர் மர்மயுத்தம் நடத்துகிறார். இந்த அரசை மத்திய பா.ஜனதா அரசு காப்பாற்றி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள்விரோத நடவடிக்கையால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அதன் விளைவு, வருகிற ஆர்.கே.நகர் தேர்தலிலும், குஜராத் தேர்தலிலும் கட்டாயம் எதிரொலிக்கும்' என்று பேசினார்