திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2025 (09:36 IST)

ஈரோட்டில் அனுமதியின்றி பிரச்சாரம்; சீமானுக்கு செக்! - தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக சீமான் பிரச்சாரம் செய்ய சென்ற நிலையில் அவர்மீது தேர்தல் ஆணையம் 4 வழக்குகளை தொடர்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து சீமான் ஈரோட்டின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரச்சாரம் செய்த சீமான் அதற்கான அனுமதியை தேர்தல் அதிகாரிகளிடம் பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் மரப்பாலம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு அருகே உள்ள மண்டபம் ஆகிய பகுதிகளிலும் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரம் தொடங்கிய சில நாட்களிலேயே 4 இடங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K