Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது; துணை பொதுச்செயலாளர் அறிவிப்பு

Vijayakanth
Last Updated: வெள்ளி, 24 நவம்பர் 2017 (19:08 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.


 
இரட்டை இலை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு தேர்தலை ஆணையத்தால் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிடிவி தினகரன் தான் போட்டியிடுவதை உறுதி செய்தார். எடப்பாடி தரப்பில் இருந்து இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஸ், திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியவர் கூறியதாவது:-
 
மக்களின் ஆதரவு இல்லாத அதிமுக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியை தான் சந்திக்கும். விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்தைப் போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. அதிமுகவை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார் என்று கூறினார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :