வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (23:47 IST)

ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பேன்: தீபா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன



அதிமுகவை பொருத்தவரை இந்த தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது என்பது அவர்களது தன்மானப்பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை அறுவடை செய்ய திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதோடு அவர் நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட தீபா இல்லை என்று தேர்தல் ஆணையம் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கும் நிலையில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறியிருப்பது நெட்டிசன்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.