1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:02 IST)

தோனியின் செல்ல மகளை கொஞ்சி விளையாடிய ஷாருக்கான்

சென்னையில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வருகை தந்திருந்தார். சென்னையில் ஷாருக்கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், அவரை கரகோஷம் எழுப்பி சென்னை ரசிகர்கள் வரவேற்றனர்.
 
இந்த நிலையில் ஒருபக்கம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ஷாருக்கான், தல தோனியின் செல்ல மகளுடன் விளையாடி கொண்டும், அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டும் இருந்தார். இதை பார்த்த தோனியின் மனைவி ஷாக்சி உற்சாகமானார்.
 
பின்னர் போட்டி முடிந்ததும் சென்னை அணியின் வெற்றிக்கு ஷாக்சியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் ஷாருக்கான். தோனி மகளுடனும் தோனியின் மனைவியுடனும் ஷாருக்கான் எடுத்து கொண்ட புகைப்படங்கள் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.