Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குள்ள மனிதராக ஷாருக்கான்; வைரல் புகைப்படம்

Last Modified வியாழன், 8 பிப்ரவரி 2018 (15:49 IST)
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 'ஜீரோ' என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கும் ஷாருக்கானின் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை தனுஷ் நடித்த 'அம்பிகாபதி', மாதவன் நடித்த 'தனு வெட்ஸ் மனு' படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார்.
 
இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அனுஷ்கா சர்மா திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படம் இதுவாகும். கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். ஷாருக்கானும் சல்மான் கானும் 10 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த படத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஷாருக்கானை குள்ள மனிதராக காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. காதலை மையப்படுத்தி ஜீரோ படம் உருவாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :