கவுதம் கம்பீரை மிஸ் செய்கிறோம் - ஷாருக்கான்

Gautam Gambhir
Last Updated: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (19:44 IST)
2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி கம்பீரை தவறவிட்ட நிலையில் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் அவரை மிஸ் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
2018ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த கம்பீரை கொல்கத்தா தக்கவைத்துக் கொள்ளவில்லை. இதனால் தன்னை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்க வேண்டாம் என கம்பீர் கூறிவிட்டார்.
 
இதனால் டெல்லி அணி கம்பீரை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2012 மற்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடரில் கொல்கத்தா கோப்பையை பெற்றுக்கொடுத்தார் கம்பீர்.
 
இந்நிலையில் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், அவரை மிஸ் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :