Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஷாருக்கானின் வீட்டை பறிமுதல் செய்த வருமான வரித்துறை

Last Updated: புதன், 31 ஜனவரி 2018 (21:11 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரூ.250 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சினிமா மூலம் வரும் வருமானத்தை எஇயல் ஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பண்னை வீடுகள் சொந்தமாக உள்ளது.
 
அலிபக் எனும் கடலோரப் பகுதியில் உள்ள ஷாருக்கானின் பண்ணை வீடு சுமார் 20 ஆயிரம் ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் ரூ.250 கோடி. ஆனால் இந்த பண்ணை வீட்டை ஷாருக்கான் வேறு ஒருவரது பெயரில் நிர்வகித்து வந்தார். 
 
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷாருக்கான் இந்த பண்ணை வீட்டுக்கு உரிய அனுமதிகளை பெறாதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சட்டம் பிரிவு 24-யின் கீழ் நடவடிக்கை எடுத்து அந்த பண்ணை வீட்டை முடக்கினர். தற்போது அந்த பண்ணை வீடு பினாமி சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :