வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (16:58 IST)

மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகிறார்கள் - புகழேந்தி

பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருவதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

 
தமிழகத்தில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவடைய போகிறது என்று டிடிவி தினகரன் வெகு நாட்களாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. அதிமுகவை அழிக்க நினைக்கும் மோடியை நம்பி தமிழக அமைச்சர்கள் ஏமாறுகின்றனர். பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகின்றனர். 
 
எங்கள் கைக்கு விரைவில் கட்சியும், ஆட்சியும் திரும்ப கிடைக்கும். தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு முழு கட்சியும் எங்களிடம் வந்துவிடும். இதனால் புதிய கட்சி தொடங்குவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.