Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதுகெலும்பில்லாத அதிமுக அமைச்சர்களே இப்போது பேசுங்கள் - குஷ்பு காட்டம்

Last Modified செவ்வாய், 6 மார்ச் 2018 (16:27 IST)
ரஜினி, கமல் பற்றி வாய் கிழிய பேசும் அமைச்சர்களுக்கு, பெரியார் சிலையை உடைப்போம் எனப் பேசியுள்ள ஹெச்.ராஜா பற்றி பேச தைரியம் இருக்கிறதா என நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

 
வடஇந்திய மாநிலமான திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து திரிபுராவில் உள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் பெரியார் சிலை என்று பதிவிட்டார். 
 
ஹெச்.ராஜாவின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எச்.ராஜா கருத்துக்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா கருத்தும் பாஜகாவும் சம்பந்தமில்லை என்று கூறி நழுவிவிட்டார்.

 
அந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜாவை எச்சை ராஜா என வெளிப்படையாக திட்டி பதிவிட்டார். மேலும், ஹெச்.ராஜாவை கண்டிக்கும் திராணி இந்த முதுகெலும்பில்லாத அதிமுக அரசுக்கு இருக்கிறதா என நான் பார்க்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினி, கமல் பற்றி கருத்து கூறும் அதிமுக அமைச்சர்கள், இந்த எச்சை ராஜாவை பற்றி பேசுவார்களா? கோழைகள்!” எனக் கடுமையான கோபத்துடன் டிவிட் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :