Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31


Abimukatheesh| Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:56 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் தன்னிச்சையாக சில பெரிய காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

 


உங்களின் அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வது, விற்பது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் சாதகமாக அமையும். சகோதரங்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். சில நேரங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். 
 
அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் கார் வாங்குவீர்கள். வண்டியை மாற்றுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இளைய சகோதரம் ஆதரவாக இருப்பர். 
 
நட்பு வட்டம் விரியும். மாதத்தின் பிற்பகுதியில் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ஆனால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். 
 
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனை திறன் வளரும். கடனில் ஒரு பகுதி கரையும் மாதமிது. 
   
அதிஷ்ட தேதிகள்: 4, 17, 26
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி


இதில் மேலும் படிக்கவும் :