Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:51 IST)

Widgets Magazine

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பெரிய பிரச்னைகளையெல்லாம் தீர்க்கப் பாருங்கள்.


 


வழக்குகள் சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். என்றாலும் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். 
 
உணவில் பழங்கள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. மூச்சுத் திணறல், சளித் தொந்தரவு, அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீடு கட்ட லோன் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். ஆன்மீகப் பயணங்கள் சிறப்பாக அமையும். புகழ் பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். 
 
கன்னிப்பெண்களே! கனவுத் தொல்லை, முகப் பரு வந்து நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். சக ஊழியர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். 
 
கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஓரளவு நிம்மதி உண்டு

news

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் அனுபவ அறிவால் பல காரியங்களை ...

news

2017-2018 குருப் பெயர்ச்சி பொதுபலன்கள்

2017 குருப் பெயர்ச்சி பொதுபலன்கள் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) ...

news

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மீனம்

மீனம் - (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) வேகமாக செயல்படும் குணம் கொண்ட ...

Widgets Magazine Widgets Magazine